






பரிசு எனக்கு குடுத்தால் அதை போட்டோ எடுத்தவருக்கே நான் குடுத்துவிடுவேன் நம்புங்க :)
just fun...:)
2.மணி 12:45 ஆயிட்டு இன்னும் துபாயில் இருந்து யாரும் வரலை தம்பி கிட்ட நீ இங்கயே இருய்யா நான் pray பண்ணிட்டு வந்துடுறேன் அப்படினு சொல்லிட்டு pray பண்ணி முடிச்சிட்டு தம்பிய தேடுனா தம்பிய காணும் போன் பண்ணி எங்க இருக்கிங்கனு கேட்டா எல்லாரும் வந்துட்டாங்க வெளியில் நிக்கிறோம் வாங்கனு சொன்னாரு எல்லாரும் ஹாய் ஐயம் சென்ஷி, ஐ’யம் லொடுக்கு, ஐ’யம் கோபி, ஐ’யம் குசும்பன்னு மாத்தி மாத்தி சொல்லுவாங்கணு தெரிஞ்சதுதான். அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் J
3. நேரா ஹோட்டலுக்கு அழைத்து போய் விட்டாச்சி சாப்பாடு வர லேட் அங்கயே முதல் மாநாடு ஆரம்பமானது நான் ஹோட்டல் மேனஜரிடம் பேச போகவேண்டி இருந்ததால் எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன்.
4.அய்யனாருக்கு கும்மி புடிக்காது என்றதும் அபிஅப்பா தேவ் எப்படி இருக்கிங்க போன கும்மியில் பாத்ததுனு பின்னுட்டம் போட்டது யாருனு கேட்கவும் அய்ஸ் கப்சிப்.
அடிக்கடி என்னைய பார்த்து கும்மி அடிப்பது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்று எதுக்கு சொன்னாருனு கடைசி வரைக்கும் புரியல.. J
5.எனது பின்னுட்டங்களை ஏன் வெளியிடவில்லை என்று அய்யனாரிடம் கேட்டதற்கு நான் போட்ட எத்தனையோ பின்னுட்டத்தை தம்பி வெளியிடவில்லை என்று திசைதிருப்பியது.
6.சாப்பாடு முடிந்ததும் சென்ற இடம் பனிசறுக்கு மைதானம். யார் யாருக்கு சறுக்கு ஷு வேண்டும் என்று கேட்டதற்கு நான் எதோ ஐஸ்கிரிம் வேண்டுமா என்று கேட்டது போல் எல்லாரும் கைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே..
7.எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது. (லியோ இருக்குயா உங்களுக்கு அடுத்த தடவை மாட்டாமலா போயிடுவீங்க..)பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.
8.வலைபதிவர் வருகையை ஓட்டி எனது ரூமை கிளின் செய்து கொண்டது பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன..? ரூமில் வைத்து இருந்த டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க) சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா இருந்தது டெல்பின் மற்றும் கண்மணி பதிவுகளை படிக்காமல் இருதிருந்தால் கண்டிப்பாக அதுவும் இடம் பெற்றிருக்கும்.!!!!
கேட்க விரும்பும் கேள்வி.:
1.வந்ததிலிருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் அமைதியாகவே (!!)இருந்தது ஏன் ?
2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?
3.தனிமை விரும்பி அய்யனார் எதற்காக துனையை தேட வேண்டும்..?
4.தம்பியிடம் அதிகமாக பேசினால் அதையே பதிவாக போட்டு விடுவாரோ என்று எல்லாரும் பயந்தது ஏன்.??
அட்வைஸ் : புகை உடலுக்கு உயிருக்கு நாட்டுக்கு வீட்டுக்கு (எனக்கும்) கேடு (ஊதி தள்ளிட்டாங்க)
டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......
Copyright © 2008 ANONYMOUS
Design by Styleshout
| Blogger template by
Blog and Web