டோண்டு ராகவன் சாருக்கு ரெண்டு கேள்விகள்..!!

|

1.மேலே உள்ள புகைப்படம் உண்மையா..?

2.சொந்த நாட்டை விட்டு எங்க செல்வார்கள்?
யூதர்களுக்கு இஸ்ரேல் அமைத்து கொடுத்தது மாதிரி இவர்களுக்கு யார் அமைத்து கொடுப்பது தனி நாடு?

11 comments:

Anonymous said...

உங்கள் கேள்விகள் இரண்டும் மனச்சாட்சியுள்ள மனிதனிடம் கேட்டிருந்தால் பதிலுக்காக நானும் காத்திருந்திருப்பேன். ஆனால், நீங்கள் கேள்வி கேட்ட மனிதருக்கு தனிமனிதனாக, அவர் தேடிய சொந்த அறிவினால் கருத்துக்களையும், கொள்கைகளையும் உருவாக்கும் மனப் பக்குவம் இருப்பதாகத் தெரியவில்லை. இதை அவரின் அனைத்துப் பதிவிலும் பார்க்கலாம். சோ, மோடி, சராசரிப் பார்ப்பனர் என அதன் நகல்தான் நீங்கள் கேள்வி கேட்ட மனிதனின் உளத் தோற்றம்.

இஸ்ரேல், அமெரிக்க ஆதரவு, திமுக/ ஆ தி மு.க தொடர்பான பார்வை, ஈழ எதிர்ப்பு என் ஒருவரிடம் கேள்வி கேட்டால் மற்றவரிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரே பார்வைதான்.

யூதருக்கும் பார்ப்பன‌ருக்கும் பூர்வீக உறவு இருப்பது போன்ற உணர்வில் இருக்கும் கூட்டத்தில் உங்கள் கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கும்?

தாமிரபரணி said...

தமிழ்ஈழம் கண்டிப்பாக உருவாகும், அது தமிழர்களின் தார்மிக உரிமை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படத்தில் உள்ளது உண்மையெனத்தான் படித்தேன்.
ராகவன் என்பவர் ஆ.வியிலோ; குமுதத்திலோ எழுதிய தொடரிலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனர்கள்..உண்மையில் மேற்குலகின் திட்டமிட்ட ஏமாற்றலுக்கு கவனக் குறைவாலும்;அதீத நம்பிக்கையாலும் ஆளானார்கள் என அந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
டொண்டு ராகவனண்ணா நிச்சயம் இதற்குப் பதில் வைத்திருப்பார்.அவர் தான் இஸ்ரேல் சார்பானவர் என்பதை மறைப்பதில்லை.

Anonymous said...

அந்த படம் இஸ்ரேல் எதிர்ப்பு பிரசாரத்திற்காக தயாரிக்கபட்டதே.

Anonymous said...

http://weblogs.asp.net/rosherove/archive/2009/01/05/political-the-truth-about-the-palestinian-loss-of-land-1946-to-2000.aspx

மின்னுது மின்னல் said...

Anonymous said...

உங்கள் கேள்விகள் இரண்டும் மனச்சாட்சியுள்ள மனிதனிடம் கேட்டிருந்தால் பதிலுக்காக நானும் காத்திருந்திருப்பேன்.
//

சரிதான்..!!

புதிதாக வருபவர்களுக்கு அவரைபற்றீ தெரிந்து கொள்ளவே இந்த பதிவு..! :)

மின்னுது மின்னல் said...

தாமிரபரணி said...

தமிழ்ஈழம் கண்டிப்பாக உருவாகும், அது தமிழர்களின் தார்மிக உரிமை
//

ஈழ பிரச்சனையும் பாலஸ்தீன பிரச்சனையும் ஒன்றல்ல..!!

ஒரு இனம் அடக்குமுறைக்கு ஆளாகும் போதோ உரிமைகள் மறுக்க படும்போதோ புரட்சி வெடிக்கும் இது இயற்கை..!!

மின்னுது மின்னல் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படத்தில் உள்ளது உண்மையெனத்தான் படித்தேன்.
//

யெஸ் உண்மை என்று தெரியும்...!!

//

ராகவன் என்பவர் ஆ.வியிலோ; குமுதத்திலோ எழுதிய தொடரிலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனர்கள்..உண்மையில் மேற்குலகின் திட்டமிட்ட ஏமாற்றலுக்கு கவனக் குறைவாலும்;அதீத நம்பிக்கையாலும் ஆளானார்கள் என அந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
//

நானும் படிச்சிருக்கேன்..!!

//
டொண்டு ராகவனண்ணா நிச்சயம் இதற்குப் பதில் வைத்திருப்பார்.அவர் தான் இஸ்ரேல் சார்பானவர் என்பதை மறைப்பதில்லை.//

தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி ..!!

மின்னுது மின்னல் said...

Anonymous said...

அந்த படம் இஸ்ரேல் எதிர்ப்பு பிரசாரத்திற்காக தயாரிக்கபட்டதே.
//

வெரிகுட் இப்படிதான் பதில் சொல்லனும்..:)

இஸ்ரேலின் தற்போதைய வரைபடம் கிடைக்குமா..??

:)

மின்னுது மின்னல் said...

Anonymous said...

http://weblogs.asp.net/rosherove/archive/2009/01/05/political-the-truth-about-the-palestinian-loss-of-land-1946-to-2000.aspx
//

நன்றி தல..!!

dondu(#11168674346665545885) said...

இப்பதிவை எப்படித் தவறவிட்டேன் எனத் தெரியவில்லை. விடைதானே, கூறுகிறேன்.

எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும், யூதரல்லாதப் பகுதியாகவும் பிரிக்க வந்தத் தீர்மானம் தேவையான 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் சோவியத் யூனியனும் அதன் ஆளுகைக்குட்பட்ட நாடுகள்தான். அறுபதுகளில் சோவியத் யூனியன் அரேபியர்களுக்கு ஆதரவாகப் போட்ட ஆட்டங்களைப் பார்த்தவர்களுக்கு இது நம்ப முடியாததுதான்.

என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பிரிட்டன் நடு நிலைமை வகுத்தது. அமெரிக்கா ஆதரித்தது. சோவியத் யூனியனும் அதன் ஆளுமைக்குட்பட்ட நாடுகளும் ஆதரித்தன. சோவியத் யூனியன் ஏன் அவ்வாறு செய்தது?

எந்த நாடாயினும் சரி, ராஜரீக விஷ்யத்தில் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்தல் அவசியம். "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர விரோதியும் இல்லை, நிரந்தரம் நம் நாட்டின் நலனே" என்பதே தாரக மந்திரம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தத் தருணம். சோவியத் யூனியனுக்கு மத்தியக் கிழக்கு ஆசியாவில் ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. அது இஸ்ரேலாக இருக்கும் என்று நினைத்தது. ஏனெனில் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியனும் அவரது கட்சியும் சோஷலிசக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இஸ்ரேல் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்தது. மெதுவாக சோவியத் யூனியன் அரேபியர்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.

1948-ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது அமெரிக்கா அதற்கு de facto அங்கீகாரம்தான் கொடுத்தது, சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே கொடுத்தது. முன்னதை விடப் பின்னது அதிக சக்தி வாய்ந்தது.

இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது பென் குரியன் இஸ்ரேலியப் பகுதியில் வாழும் யூதரல்லாதவர்களை அங்கேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் புது தேசத்தில் சமக் குடியுரிமை பெற்று வாழலாம் என்றுக் கூறினார். ஆனால் சுற்றியிருந்த அரபு தேசங்கள் அவர்களை இடத்தைக் காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்லப் பணித்தனர். அப்போதுதான் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி ஒரேயடியாக இஸ்ரேல் இல்லாமல் செய்ய முடியும் என்று ஆசை காட்டினர். அப்போது வெளியேறியவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். 1948 போரில் இஸ்ரேல் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக பாலஸ்தீனியர் அகதி முகாம்களில் மாட்டிக் கொண்டனர். இந்த அழகில் ஜோர்டான் வேறு யூதர் அல்லாதப் பகுதி என்று ஐ.நா. அறிவித்திருந்தப் பகுதியைக் கபளீகரம் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அதுதான் மேற்குக் கரைப் பகுதி. 1948 போர் நிறுத்தத்துக்குப் பின்னால் ஜெரூஸலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரும் பகுதி ஜோர்டனிடமும், ஒரு சிறு பகுதி இஸ்ரேலியரிடமும் வந்தது. இஸ்ரேலியரால் அழுகைச் சுவர் என்றுப் பெயரிடப்பட்ட பயைய யூதக் கோவிலின் இடிபாடு ஜோர்டான் வசம். 1948-லிருந்து 1967 வரை யூதர்களுக்கு அங்கே அனுமதியில்லை. 1956-ல் சூயஸ் கால்வாயை எகிப்தியர் தேசீயமயமாக்கினர். அப்போதிலிருந்து இஸ்ரேலியக் கப்பல்கள் அதில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இஸ்ரேலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நசுக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்வதே அரபு தேசங்களின் நோக்கம்.

ஆனால் என்ன அக்கிரமம்! இஸ்ரேல் அழிய மறுத்தது. அது பாட்டுக்கு உலகெங்கிலிருந்தும் யூதர்களை வந்துக் குடியேறச் செய்துக் கொண்டிருந்தது. எந்த நாட்டிற்கும் இம்மாதிரி சந்தர்பங்களில் முழி பிதுங்கியிருக்கும். ஆனால் இஸ்ரேல் எல்லா சோதனைகளையும் தைரியமாக சமாளித்து வந்தது. இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் ஊரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):

"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"

ஒன்று தெளிவாகிறது.

“யூதர்களுக்கு இஸ்ரேல் அமைத்து கொடுத்தது மாதிரி இவர்களுக்கு யார் அமைத்து கொடுப்பது தனி நாடு”?

உங்கள் கேள்விக்கு அவசியமே இல்லை. இஸ்ரேல் உருவானபோதே பாலஸ்தீனமும் உருவாயிற்று. இஸ்ரேல் அதை நல்லபடியாக எடுத்து கொண்டு ராஜ்யம் ஸ்பாதித்தனர்.

பாலஸ்தீனியரோ சக இசுலாமிய கொள்ளைக்கார நாடுகளான ஜோர்டானிடமும் எகிப்திடமும் தங்கள் நாட்டை மொய் எழுதி கொடுத்தனர்.

எதற்கும் எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகளை படிக்கவும்.

பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D

அன்புடன்,
டோண்டு ராகவன்

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!