குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதோடு அவர்களுக்கு சிறுவயது முதல் சிறு தொகை கொடுத்து (தினம்,வாரம் அல்லது மாதம்) சேமிக்க சொல்லவும்.
கடைவீதிகளுக்கு அவர்களை அழைத்து செல்லும் போது அவர்களின் சேமிப்பு தொகையையும் கொண்டுவர சொல்லவும்.
அவர்கள் விரும்பிய பொருள்களை அவர் பணத்திலிருந்தே செலவு செய்ய சொல்லவும்.
பணம் அதிகம் தேவைபட்டால் பெற்றோர்கள் தங்களின் பணத்தை கொடுக்க கூடாது.
அந்த பொருளை வாங்க இன்னும் அதிகம் சேமிக்க்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் கொண்டு வருவது அவசியம்.
தேவைய்யற்ற பொருள் வாங்க நேர்ந்தால் அதன் குறைகளை சுட்டி காட்டுங்கள்.
உடனடி மாற்றம் வந்துவிடும் என்று எதிர்பாக்க கூடாது.
பெற்றோர்கள் காத்திருந்து அவர்கள் விளங்கும் சமயத்தில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.