நம்பிக்கை......

|
வாழ்க்கை என்பது கயிறு மேல் நடப்பது போன்றதுதான்



ஆனால் இவர்கள் வாழ்க்கை...???

உங்களை கயிறு மீது நடக்க விடாமல் கம்பியூட்டர் முன் அமர வைத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

பார்க்க நேர்ந்தால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அல்லது அவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டுங்கள்

பணம் கொட்டிகிடக்குது பாகம் - 2 -- சேமிப்பு

|
குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதோடு அவர்களுக்கு சிறுவயது முதல் சிறு தொகை கொடுத்து (தினம்,வாரம் அல்லது மாதம்) சேமிக்க சொல்லவும்.

கடைவீதிகளுக்கு அவர்களை அழைத்து செல்லும் போது அவர்களின் சேமிப்பு தொகையையும் கொண்டுவர சொல்லவும்.

அவர்கள் விரும்பிய பொருள்களை அவர் பணத்திலிருந்தே செலவு செய்ய சொல்லவும்.

பணம் அதிகம் தேவைபட்டால் பெற்றோர்கள் தங்களின் பணத்தை கொடுக்க கூடாது.

அந்த பொருளை வாங்க இன்னும் அதிகம் சேமிக்க்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் கொண்டு வருவது அவசியம்.

தேவைய்யற்ற பொருள் வாங்க நேர்ந்தால் அதன் குறைகளை சுட்டி காட்டுங்கள்.

உடனடி மாற்றம் வந்துவிடும் என்று எதிர்பாக்க கூடாது.

பெற்றோர்கள் காத்திருந்து அவர்கள் விளங்கும் சமயத்தில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பணம் கொட்டிகிடக்குது ( பாகம் 1)

|
பணம் மரத்திலா காய்க்கிறது ??

A T M மெஷினில் முடிவில்லா பணம் வந்துகொன்டே இருக்குமா??

விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து கொன்டே இருக்க முடியுமா??

சின்ன பிள்ளை தானே என்று உதாசீன படுத்தாமல் உலக நடைமுறையில் பணத்தின் உண்மை நிலையை குழந்தைகளின் உள்ளங்களின் உணர்த்துவதற்க்கு சில வழிகள்

*********

வேலையை பற்றியும், அதன் சிரமங்களை பற்றியும், கடின உழைப்பினால் தான் பணம் வருகிறது என்பதையும், அப்படி வரும் பணத்தை தான் பேங்கில் சேமித்து வைத்து A T M மூலமாகவோ BANK க்கு சென்றோ பணம் எடுக்கிறோம். நமது A/C யில் பணம் இருந்தால் மட்டுமே மெஷின் பணம் தரும் என்பதை தெளிவாக புரியவையுங்கள்.

புரிங்சுக்க கூடிய வயது இல்லை என்றாலும் சொல்லி விடுங்கள்.

பின்குறிப்பு 1 :

இதை எழுதுவதற்க்கு காரணம் எனது நனபரின் மகன் கேட்ட கேள்வி:

கேள்வி இதுதான் :

பணம் இல்லை பணம் இல்லைனு சொல்லுரீங்க பேங்குல போயி எடுக்க வேண்டியதுதனே ஒரு பேப்பரில் எழுதி குடுத்தா பணம் தரபோறாங்க இதுக்கு போயி சண்டை போடுரீங்கனு.

பின்குறிப்பு 2 :

இது பாகம் 1 தான் என்ன பயப்பிட கூடாது மொத்தம் மூன்று பாகம் மட்டுமே