Showing posts with label காப்பிபேஸ்ட். Show all posts
Showing posts with label காப்பிபேஸ்ட். Show all posts

குரங்காட்டிகள்.. (2) மங்கை அவர்களுக்கு சமர்ப்பணம்

|
மங்கை அவர்கள் இங்கே எழுதிய கட்டுரைக்கு ஆதரவாக
இந்த கவிதை நான் படித்தது 2003-ல் முடிந்த அளவு ஞாபக படுத்தி அப்படியே எழுதியிருக்கேன்.. எழுதியது யாருன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்...:)


பால் மணம் மாறா
பச்சை உதட்டில்
மாற்று மொழிஊட்டுகின்ற
போட்டி

பூக்களை பறித்து
பூகம்ப பயிற்சி
மேதை கனவில்
தொடரும் வதைகள்

அம்மாவை மம்மியென
அவசரமாய் அழைக்க
பத்து வட்டிக்கு
முழ்கும் மழலைகள்

கேட்காமலே வாங்கி கொடுக்கிறோம்
கொளுத்தும் கோடையில்
கழுத்தில் "டை"ய்யும்
காலில் "ஷு"வும்
இங்கில்லாந்து குளிரை
வாங்கி தருவது எப்படி..?

போலி கெளரவம்
கூட்டனி அமைக்க
கல்வி,கொள்ளையர்கள்
காலில் கிடக்கிறது....


தோள் வலி மிகுந்தும்
கண்ணீர் வடிப்பதும்
தினம் தினம் தொடர்கிறது....

பிஞ்சு வதையை
தடுக்கும் நினைவு
நெஞ்சுக்கு எங்கே வருகிறது...