அன்புள்ள மனைவிக்கு,...

|
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..


என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.


மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.


உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று.
- நன்றி: மக்கள் உரிமை

23 comments:

MyFriend said...

me the firstuu? ;-)

MyFriend said...

ஹப்பாடா.. ஒரு பதிவு நீங்க எழுதுறதுக்குள்ள எத்தனை காலம் காக்க வேண்டியிருக்கு! :-)

ALIF AHAMED said...

:: மை ஃபிரண்ட் ::. said...

ஹப்பாடா.. ஒரு பதிவு நீங்க எழுதுறதுக்குள்ள எத்தனை காலம் காக்க வேண்டியிருக்கு! :-)
//

:)

Anonymous said...

நல்லா இருக்குப்பா

MyFriend said...

நான் என்னமோ உங்க மனைவிக்கு காதல் மடல் எழுதியிருக்கீங்களோன்னு படிச்சேன்.

கடைசியிலே ஏன் sad ending???????

ALIF AHAMED said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu? ;-)

//

ஹைய் நிங்க தான் ஃபஸ்ட்டு :)

Thamiz Priyan said...

:)
:(

Unknown said...
This comment has been removed by the author.
குப்பன்.யாஹூ said...

பதிவிற்கு நன்றி. ஆனால் இந்த மாத்ரி 1000 பதிவுகள், கவிதைகள் எழுதினாலும் நம் மக்களுக்கு இன்னமும் துபாய், சிங்கபூர், மலேசியா மோகம் குறைவது இல்லை.

அதற்கு உண்மையான காரணம் அங்கு உள்ள நண்பர்கள் உண்மை நிலையை சொல்லாமல் இருத்தல். துபாயில் ஒரு ரூமில் 8 நபர்களும், 1 கழிவறை குளியல் அறையை பயன் படுத்துவதை விடுமுறையில் வரும்போது சொல்வது இல்லை.

அங்கு உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சொல்வது, வெளிநாடு கார், குளிர்சாதன கடைகள், தூய்மையான சாலைகள் அதை மட்டுமே சொல்வது.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

Unknown said...

கொன்னுட்ட. நல்லா இருப்பா

ALIF AHAMED said...

இது காப்பி பேஸ்ட் பதிவு

சுல்தான் பாய் மன்னிக்க..!!

:(

M. Hussainghani. said...

மீள் பதிவுக்கு நன்றி

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//சுல்தான் பாய் மன்னிக்க..!! :(//
கொன்னுட்ட - அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்
நல்லா இருப்பா - இன்னும் நிறைய எழுதுங்கள்
என்று புரிந்து கொள்ளலாம்.
ஹி..ஹி..:)))

நாதஸ் said...

Sad Ending :(

ALIF AHAMED said...

வெடிகுண்டு முருகேசன் said...

நல்லா இருக்குப்பா
//

சரிப்பா..:)

ALIF AHAMED said...

கடைசியிலே ஏன் sad ending???????
//

கதைக்கு ஒரு திரில் வேண்டாமா..:)

ALIF AHAMED said...

தமிழ் பிரியன் said...

:)
:(
/
/

பதிவு போட்டதற்கு சிரிப்பு

படிச்ச பின்பு அழுகையா...

சிரிங்க பாஸு :)

ALIF AHAMED said...

அங்கு உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சொல்வது, வெளிநாடு கார், குளிர்சாதன கடைகள், தூய்மையான சாலைகள் அதை மட்டுமே சொல்வது
//

ஆமா இங்கேயிருந்து ஊருக்கு வர்ரவங்க குடுக்கிற பில்டப்பு ரொம்ப ஒவருதான்

அதை நம்பி வந்து தான் இங்க ஆடு மாடு மேய்க்குதுங்க :(

ALIF AHAMED said...

M. Hussainghani. said...

மீள் பதிவுக்கு நன்றி
//

பதிவு போட விட மாட்டிங்களே :)

ஹி ஹி

ALIF AHAMED said...

nathas said...

Sad Ending :(
//

என்ன பண்ணுவது உண்மை கசக்கதான் செய்யும் :)

குசும்பன் said...

அருமை சகா!

Anonymous said...

குசும்பன் said...

அருமை சகா!
//

நன்றி (சரா)..:)

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!