வலைபதிவர் சந்திப்பு எனது பார்வையில்.....

|
1.அபுதாபியில் இருந்து முதலில் வந்த தம்பி எனக்கு போன் செய்து வந்துவிட்டேன் என்று சொன்னதும் வெளியில் வந்து பாத்தால் நிறைய பேர் நிக்க இதுல தம்பி யாருன்னு தெரிஞ்சிக்க போன் எடுத்து ரிங் பண்ணுனா யாருமே பாக்கெட்டில் கையவிட்டு மொபைலை எடுக்க காணும் ரிங் எங்கயாவது அடிக்குதானு நெருங்கி நெருங்கி போறேன் ரிங் அடிக்குது ஆறடி உருவம் என்னைய பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்குது மொத ஆப்பு என்னக்கு

2.மணி 12:45 ஆயிட்டு இன்னும் துபாயில் இருந்து யாரும் வரலை தம்பி கிட்ட நீ இங்கயே இருய்யா நான் pray பண்ணிட்டு வந்துடுறேன் அப்படினு சொல்லிட்டு pray பண்ணி முடிச்சிட்டு தம்பிய தேடுனா தம்பிய காணும் போன் பண்ணி எங்க இருக்கிங்கனு கேட்டா எல்லாரும் வந்துட்டாங்க வெளியில் நிக்கிறோம் வாங்கனு சொன்னாரு எல்லாரும் ஹாய் ஐயம் சென்ஷி, ஐ’யம் லொடுக்கு, ஐ’யம் கோபி, ஐ’யம் குசும்பன்னு மாத்தி மாத்தி சொல்லுவாங்கணு தெரிஞ்சதுதான். அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் J

3. நேரா ஹோட்டலுக்கு அழைத்து போய் விட்டாச்சி சாப்பாடு வர லேட் அங்கயே முதல் மாநாடு ஆரம்பமானது நான் ஹோட்டல் மேனஜரிடம் பேச போகவேண்டி இருந்ததால் எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன்.

4.அய்யனாருக்கு கும்மி புடிக்காது என்றதும் அபிஅப்பா தேவ் எப்படி இருக்கிங்க போன கும்மியில் பாத்ததுனு பின்னுட்டம் போட்டது யாருனு கேட்கவும் அய்ஸ் கப்சிப்.

அடிக்கடி என்னைய பார்த்து கும்மி அடிப்பது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்று எதுக்கு சொன்னாருனு கடைசி வரைக்கும் புரியல.. J

5.எனது பின்னுட்டங்களை ஏன் வெளியிடவில்லை என்று அய்யனாரிடம் கேட்டதற்கு நான் போட்ட எத்தனையோ பின்னுட்டத்தை தம்பி வெளியிடவில்லை என்று திசைதிருப்பியது.

6.சாப்பாடு முடிந்ததும் சென்ற இடம் பனிசறுக்கு மைதானம். யார் யாருக்கு சறுக்கு ஷு வேண்டும் என்று கேட்டதற்கு நான் எதோ ஐஸ்கிரிம் வேண்டுமா என்று கேட்டது போல் எல்லாரும் கைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே..

7.எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது. (லியோ இருக்குயா உங்களுக்கு அடுத்த தடவை மாட்டாமலா போயிடுவீங்க..)பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.

8.வலைபதிவர் வருகையை ஓட்டி எனது ரூமை கிளின் செய்து கொண்டது பேச்சிலர் ரூம் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன..? ரூமில் வைத்து இருந்த டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க) சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா இருந்தது டெல்பின் மற்றும் கண்மணி பதிவுகளை படிக்காமல் இருதிருந்தால் கண்டிப்பாக அதுவும் இடம் பெற்றிருக்கும்.!!!!

கேட்க விரும்பும் கேள்வி.:

1.வந்ததிலிருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் அமைதியாகவே (!!)இருந்தது ஏன் ?

2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?

3.தனிமை விரும்பி அய்யனார் எதற்காக துனையை தேட வேண்டும்..?

4.தம்பியிடம் அதிகமாக பேசினால் அதையே பதிவாக போட்டு விடுவாரோ என்று எல்லாரும் பயந்தது ஏன்.??

அட்வைஸ் : புகை உடலுக்கு உயிருக்கு நாட்டுக்கு வீட்டுக்கு (எனக்கும்) கேடு (ஊதி தள்ளிட்டாங்க)


டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......

28 comments:

கோபிநாத் said...

\டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க....\\

எப்படி மின்னலு எப்படி இதெல்லாம் !!!!!!

நீ ஒரு நடிகன்னு தெரியும் ஆனா சிவாஜிக்கே அல்வா கொடுக்குற அளவுக்கு நடிப்போன்னு இப்ப தான் தெரியும் ;))))

நாங்க எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்த நாள் அது ;)))

எங்களால் உங்களுக்கு எதாவது குறைகள் இருந்தா சொல்லுங்க

கோபிநாத் said...

\\எனது மொபைல் ரெக்காடரை ஆன் செய்து டேபில் மீது வைத்து சென்றேன் இது யாருக்கு தெரியாது (பதிவு போட வசதியாக இருக்குமென்பதால் ஆப்படிக்கவென்று தப்பா நினைக்க கூடாது) இடைஇடையே வந்து பேசிவிட்டு சென்றேன். \\

இதுக்கு பதிலா அய்யனாருக்கு ஆப்பு வச்சிட்டு சென்றேன்னு சொல்லியிருக்கலாம்

கோபிநாத் said...

\\அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் \\

எல்லாம் இந்த அபி அப்பா தான்....

கோபிநாத் said...

\\ைபுள்ளதனமா கைய்ய தூக்க சிரிச்சிகிட்டே எல்லாருக்கும் மாட்டிவிட்டாச்சி அதுக்கு பிறகு நடந்ததுதான் போன பதிவில் எல்லாருக்கும் தெரியுமே.\\

ம்ம்ம்....யாருக்கு தெரியும் ஆப்புன்னு !!!!! அம்மா...அய்யோ....இன்னும் கூட முடியல....எனக்கே இந்த அளவுக்குன்னா? குசும்பா!!!!!!

கோபிநாத் said...

\\ டேட்டாலை “சரக்குனு” நினைத்து குடிக்க பார்த்தது (யாருனு நீங்களா ஒத்துக்கங்க)\\

;))))))))) எனக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேன் ;)))))

VSK said...

என்ன எதுவுன்றே தெரியாமல், வாய் விட்டு சிரித்துப் படிக்க வைத்த ஒரு பதிவு!

உங்கள் பெருந்தன்மை கடைசி வரிகளில் மிளிர்கிறது.

குசும்பன் said...

"டிஸ்கி : இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று இப்போது நினைப்பதாலும் சந்திப்பில் நானும் மனிதன் என்ற வகையில் குறைகள் ஏற்பட்டு இருப்பின் மன்னிக்க......"

என்னது குறையா அய்யா ராசா ஒன்னியும் இல்ல, எங்க உடம்புலதான் அங்க அங்க அங்கங்கள் மிஸ்ஸிங் அதுதான் குறை சில இடங்கள் வீங்கி இருப்பதால் அதுக்கும் இதுக்கும் கழிஞ்சு போச்சு...so வருத்தபடாத ராசா வேணும் என்றால் அபி அப்பா தனியாக வருவார் நன்றாக "கவனித்து" அனுப்பவும்.

குசும்பன் said...

கோபிநாத் said...
"அம்மா...அய்யோ....இன்னும் கூட முடியல....எனக்கே இந்த அளவுக்குன்னா? குசும்பா!!!!!! "

கோபி இரண்டு நாட்களுக்கு பிறகு இப்ப இடது கையில கொஞ்சம் மூவ்மெண்ட்ஸ் தெரியுது,இன்னும் ஒரு வாரத்தில் சரி ஆகிவிடும். பார்ப்போம்.

குசும்பன் said...

VSK said...
"உங்கள் பெருந்தன்மை கடைசி வரிகளில் மிளிர்கிறது. "

VSK sir அவரின் பெருந்தன்மை எங்கள் உடம்பில் வலியால் பிலிருகிறது ஐய்யா.

குசும்பன் said...

"2.நான் எட்டு போட்டுட்டேன் குசும்பா நீ எப்ப பனிசறுக்கில் எட்டு போடுவாய்..?""

அய்யா கையில கட்டு போட்டு இருக்கேன், இதுல எட்டு வேறயா?
என்னய்யா? சாமி படத்துல எட்டு போட தெரியுமான்னு கேட்டதுக்கு இன்ஸ்பெக்டர், கைய காணமல் அடிச்ச மாதிரி என் பல பார்ட்ஸ் காணம அடிச்சுட்டியேய்யா?

உன்ன 8 போட கூப்பிட்டது அவ்வளோ பெரிய தப்பா ராசா????

உன்ன இனி 8 போட கூப்பிடுவேன்.

Ayyanar Viswanath said...

மின்னலு நல்லா எழுதியிருக்கய்யா..ஆனா அந்த ரகசிய டேப்ப அழிச்சிடுயா..கன்னா பின்னான்னு பேசியிருக்கேன் டெலிட் பண்ணிடு ராசா

கதிர் said...

யோவ் மின்னல!

ராஜஉபசாரம் பண்ணிட்டு குத்தம் கொற பண்ணிருந்தா மன்னிச்சிக்குங்கன்னு சொல்றது ஓவரா இல்ல?

நீங்கதான் மின்னல்னு கலவரத்தோட என்னை தேடும்போதே கண்டுபிடிச்சிட்டேன் இருந்தாலும் தெரியாத முகத்தை முதல் முதலில் தேடும்போது அவங்களோட முகபாவத்தை பாக்கறது ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதான் கால் அட்டெண் பண்ணாம சரியா கண்டுபிடிக்கறிங்களான்னு பாத்துகிட்டே இருந்தேன்.

அடுத்த ட்ரிப் போடவேண்டி இருக்கும்னு நினைக்கறேன்.

லொடுக்கு said...

நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான். :(

கப்பி | Kappi said...

கலக்கியிருக்கீங்க!! என்ஜாய் மாடி :))

Jazeela said...

//எல்லா games ம் ஏறி எலும்பை திருகி முறிக்கி கலக்கி முடிச்சதும் boating சென்றது. // அட இதப்பத்தி யாருமே வாயை திறக்கலப்பா.

//லியோ சுரெஷ் பக்கத்தில் உக்காந்துகிட்டு பெடலை போடாமல் என்னையவே மிதிக்கவிட்டது.// பெடலைதானே மிதிக்க விட்டாங்க உங்களை மிதிக்கலையே சந்தோஷப்படுங்க ;-)

//பிறகு பிளான் படி zoo க்கு போக இருந்த சமயத்தில் குசும்பனின் சதியால் செல்லாமல் கைவிட்டது.// எல்லாத்தையும் ஒரே இடத்ததில் பார்த்துவிட்டதால் அது எதற்குன்னு நினைச்சிருப்பார் குசும்பன் ;-)

ஆனா ஆளாளுக்கு 'என்சாய்' பதிவு போட்டு வயத்தெரிச்சலை கிளப்புறீங்கப்பா.

Anonymous said...

ஜெஸிலா said...
"ஆனா ஆளாளுக்கு 'என்சாய்' பதிவு போட்டு வயத்தெரிச்சலை கிளப்புறீங்கப்பா. "

ஏன் சொல்ல மாட்டீங்க? வாங்கிய ஆப்பின் வலி எங்களுக்கு இல்ல தெரியும்

கண்மணி/kanmani said...

மின்னலு சத்தியமாச் சொல்லுமய்யா .நெசமா என்+டெல்பின் பதிவுகளால 'தண்ணி' அடிக்கல?
அப்ப நீங்க உண்மையான பாசக்கார குடும்ப உறுப்பினர்கள்தான்.
ஆனால் இது எப்பவும் தொடரனும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி டெல்பின் பதிவுக்கு இத்தனை ஒரு மதிப்பா ஆகா.வாழ்க இருவரும்.

எல்லாரும் பாராட்டறமாதிரி நல்லா கவனிச்சு ( கவனிக்க நன்றாக "கவனிச்சு") அனுப்பிட்டு நானும் மனிதன் தானேன்னு டிஸ்கி..
அய்யோ மனிதனுக்குமேல போய்ட்டீங்க போங்க.

ALIF AHAMED said...

கண்மணி said...

மின்னலு சத்தியமாச் சொல்லுமய்யா .நெசமா என்+டெல்பின் பதிவுகளால 'தண்ணி' அடிக்கல?
அப்ப நீங்க உண்மையான பாசக்கார குடும்ப உறுப்பினர்கள்தான்.
ஆனால் இது எப்பவும் தொடரனும்
//

அக்கா உண்மையிலேயே நான் புகை தண்ணி அடிப்பதில்லை மற்றும் அடித்ததில்லை யோக்கியவான் முதல் கல்லை எடுக்கட்டும்னு சொன்னா நான் எடுக்க அதிக தகுதி இருக்கு நம்புங்க.

ALIF AHAMED said...

நீ ஒரு நடிகன்னு தெரியும் ஆனா சிவாஜிக்கே அல்வா கொடுக்குற அளவுக்கு நடிப்போன்னு இப்ப தான் தெரியும் ;))))
//

இப்பதான் ஆஸ்கர் ஆவார்டே கிடைத்த மாதிரி இருக்கு..:)

Geetha Sambasivam said...

உங்க எல்லாரோட ஃபோட்டோவையும் பார்த்துட்டுத் தூக்கத்திலே தினமும் நான் பயந்து கத்திட்டே இருக்கேன்னு என்னோட மறுபாதி சொல்றாரு, இங்கே மந்திரிக்கவும் வழியில்லை, என்ன செய்யறது? :P

சென்ஷி said...

//அதுக்காக ரெண்டு சென்ஷி வந்ததுதான் கொஞ்சம் ஓவர் //

நமக்கு போலி வெளியில இல்ல. உள்ளெயேதான் இருக்காங்க :))

ALIF AHAMED said...

VSK said...

என்ன எதுவுன்றே தெரியாமல், வாய் விட்டு சிரித்துப் படிக்க வைத்த ஒரு பதிவு!
//

அமிரக வலைப்பதிவர்கள் சந்தி(ச்சி) சிரித்தது இந்தபதிவுல சொல்லியிருக்கேன். :)

ALIF AHAMED said...

delphine said...

சரக்கு வாங்கி வைப்பதாய் ஒரு ஐடியா///////ஆஹா... இப்படியெல்லாம் வேறு? திருந்துங்கப்பா.. போட்டோஸ் பார்த்தேன். நல்லா இருக்கு.. அதுவும் ராக்கெட் பின்னால் எடுத்தது..
//

போட்டோவெல்லாம் அனுப்பினது எதுக்காகனா நாங்க எங்கையாவது அடிவாங்கிகிட்டு இருந்தா கண்டுகாமா போயிடாம நீங்களும் ரெண்டு மாத்து மாத்திட்டு போவீங்கணுதான்.. :)

ALIF AHAMED said...

கோபி இரண்டு நாட்களுக்கு பிறகு இப்ப இடது கையில கொஞ்சம் மூவ்மெண்ட்ஸ் தெரியுது,இன்னும் ஒரு வாரத்தில் சரி ஆகிவிடும். பார்ப்போம்.
//

எதிர் பாத்த அளவுக்கு டேமெஜ் கம்மியோனு இப்போ யோசிக்கிறேன்..:)

ALIF AHAMED said...

லொடுக்கு said...

நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான். :(
///

நீங்க வருவதா அபிஅப்பா சொன்னார்
ஐ'யம் லொடுக்குனு ஒரு ஆள் கையை வேற குடுத்தாங்க. (ஏன் வரல..?)

ALIF AHAMED said...

அய்யனார் said...
மின்னலு நல்லா எழுதியிருக்கய்யா..ஆனா அந்த ரகசிய டேப்ப அழிச்சிடுயா..கன்னா பின்னான்னு பேசியிருக்கேன் டெலிட் பண்ணிடு ராசா
//


அய்ஸ் என்னிடம் உள்ளதை டெலிட் பண்ணிடுவேன் ஆனா நான் எல்லாருக்கும் அனுப்புனதை எப்படி டெலிட் பண்ணுவது.. ???

Leo Suresh said...

மின்னலு,
வாழ்க்கையில் ஒரு சுவையான நாளை கொடுத்துவிட்டு, இப்படி திஸ்கி எல்லாம் போடுறிய ராசா, நல்லாஇரு.
லியோ சுரேஷ்

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!